எனது குருமார்களிடம் நான் பயின்ற அடிப்படை விஷயங்களும் மற்றும் அறிவியல் ரீதியாக ஒவ்வொரு தனிநபருக்கும் வாஸ்து மிகத் துல்லியமாக வேலை செய்வதையும் என்னுடைய 13 வருடத்தில் வாஸ்துவில் நான் அனுபவித்த பலன்களை இந்த உலகத்தில் தேடல் நிறைந்த நபர்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக வாஸ்து அறிவியலை ஆன்லைன் வாயிலாக சொல்லிக் கொடுக்க உள்ளேன். இது ஏதோ கரும்பலகையில் எழுதி வைத்து கதை சொல்வதல்ல வாஸ்து... எம்முடைய ஆன்லைன் பயிற்சியில் கலந்து கொள்ளக்கூடிய ஒவ்வொரு நபரும் அதை எளிதாக புரிந்துகொண்டு உணர்வு பூர்வமாக உணரும் விதமாக உருவாக்கியுள்ளேன் நான் வாஸ்து அறிவியலை கற்றுக்கொண்ட பிறகு நான் மட்டும் என்னுடைய குடும்பம் மட்டும் அதனுடைய பயனை அடைந்து சந்தோசமாக வாழ்ந்து காலத்தை முடித்துக் கொள்ள எனக்கு உடன்பாடில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால்... இந்த உலகத்தில் வாஸ்து என்கிற பெயரில் நிறைய நபர்கள் உங்களை அனுதினமும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இதை அறிந்து என் மனம் வேதனை அடைந்து.. இந்த வாஸ்து அறிவியலை குறைந்தது ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நபர்களுக்காவது இதை கற்று கொடுக்க வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்துடன் இதை ஒரு எளிய டிஜிட்டல் ஆன்லைன் வகுப்பாக துவங்கி இருக்கிறேன்.
இதை ஏதோ ஒரு சம்பிரதாயத்துக்காக நாம் கற்றுக் கொடுக்கவில்லை.... எதிர்கால சந்ததிகள் அனைவருக்கும் படிக்கும் வயதிலேயே எனது Vastu Tech school (குருகுலம்) வந்து தங்கி இரண்டு அல்லது மூன்று நாள் நேரடி பயிற்சி பெற்றுக் கொள்ளலாம். குருகுலத்தில் வாஸ்துவை அறிவாக சொல்லிக் கொடுக்காமல் புரிய வைக்கும் படியான செய்முபடியான செய்முறை (practical) பயிற்சிகள் மற்றும் இடவசதிகள் தேவைப்படுகிறது இந்த ஒரு நல்ல செயலுக்கு எனக்கு நிதி தேவைப்படுகிறது.. வாஸ்து என்றால் நான்கு மூலை எட்டு திசை பஞ்சபூதங்கள் தானே என்று நீங்கள் முடிவு எடுத்து விட வேண்டாம் உங்களுடைய வீடும் உங்களுடைய உடலமைப்பும் இரண்டும் ஒன்றே மனிதன் வாழ வேண்டும் என்றால் உயிர் வேண்டும்.. மனிதமே வாழ வேண்டும் என்றால் நல்ல வீடு வேண்டும் வாஸ்து என்பது அறிவு சார்ந்த விஷயம் அல்ல இது புரிந்து உணரக் கூடிய விஷயம், அதாவது தூல உடம்பிற்கு புரியாது... சூட்சும உடம்பில் உணர்ந்து கொள்ள முடியும். யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள், மொபைல் அப்ளிகேஷன் இப்படி அனைத்து வலைத்தளங்களிலும் ஏற்கனவே பல நூறு வீடியோக்கள், கட்டுரைகள் நாம் பதிவிட்டு உள்ளோம் அவைகள் அனைத்தும் விழிப்புணர்வுக்காக 10% மட்டுமே.
1. இந்த இயற்கையில் உள்ள பஞ்சபூதங்களுக்கும் மனித உடலுக்கும் உள்ள தொடர்புகளை தெரிந்து இருப்பீர்கள்.
2. உலகுக்கு உயிர் கொடுக்கும் சூரிய பகவான் நமக்கு தினமும் என்ன கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதைப்பற்றி தெரிந்து இருப்பீர்கள்.
3. பணம் வரவு காண இடம் எதுவென்றும்.. ஆரோக்கியத்திற்கான இடம் எதுவென்றும், ஆயுளுக்கான இடம் எதுவென்றும், வீட்டில் உயிர் உள்ள இடம் எது வென்றும் தெரிந்து கொண்டே
இருப்பீர்கள்.
4. சர்க்கரை வியாதி, கேன்சர், ஹார்ட் அட்டாக், தைராய்டு, தோல் வியாதி, சொரியாசிஸ், கிட்னி பிரச்சனை, முதுகு தண்டுவட பிரச்சனை, மூளைவளர்ச்சி குறைவு இப்படி பலதரப்பட்ட
பிரச்சினைகள் எங்கு இருந்து நம் உடலுக்கு வந்தது என்கிற விவரங்களை தெரிந்து இருப்பீர்கள்.
5. குறித்த வயதில் திருமணம் ஆகவில்லை, திருமணம் ஆகியும் குழந்தை கிடைக்கவில்லை, திருமணமே ஆகாமல் கன்னிகளாக இருப்பது இவைகளைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து
இருப்பீர்கள்.
6. வாஸ்து அறிவியல் உண்மையில் எதைக் கொடுக்கிறது.
7. ஏன் வாஸ்து எல்லோருக்கும் ஒரே மாதிரி வேலை செய்வதில்லை?
8. ஒரே மாதிரியான கட்டிட அமைப்புகள் இருந்தும் பலன்கள் மாறுபடுகிறது என்ன காரணம்?
9. இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு இந்த பயிற்சி முடிவில் தீர்வு கிடைக்கும். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன் பயிற்சி முழுமையாக கற்றுக் கொண்ட பிறகு மேலும்,
உங்களுடைய சந்தேகங்களை என்னுடைய வாட்ஸ்அப் எண்ணில் கேளுங்கள் அல்லது இமெயிலில் கேளுங்கள்.
அனைத்து பாடங்களும் பதுவு செய்யப்பட்ட வீடியோவாக வழங்கப்படுள்ளது. பாடங்களை மொபைல், கம்பியூட்டர் மூலம் ஓய்வு நேரத்தில் படிக்கும்படியாக வகுப்புகள் உருவாக்கியுள்ளோம். ஆன்லைன் வகுப்புக்கு பணம் கட்டிய நாளிலிருந்து உங்களுக்கு கொடுக்கப்பட்ட நாட்கள் மற்றும் மணி நேரம் குறைந்து கொண்டே வரும் அதற்குள் உங்களுடைய ஆன்லைன் வீடியோக்களை பார்த்து கேட்டு குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஆன்லைன் வகுப்பு நடக்கும் பொழுது தன்னுடைய வீட்டில் அந்தந்த பகுதியில் தவறு இருக்கிறது இந்த பிரச்சினைக்கு எந்த பகுதியில் தவறு இருக்கிறது எந்த தவறு என்ன பிரச்சினை கொடுத்துக்கொண்டிருக்கிறது போன்ற விஷயங்கள் உங்களுடைய மூளைக்குள் கணக்கிட்டுக் கொண்டே வரும் அந்த நேரத்தில் ஆன்லைன் வகுப்பில் துண்டித்து விட்டு வீட்டை சரிசெய்யும் வேலையில் இறங்கி விடக்கூடாது மாறாக வகுப்பு முழுவதும் கேட்டு விடுங்கள் அப்பொழுதுதான் இறுதியில் ஒரு துல்லியமான தெளிவான முடிவு எடுக்க முடியும்.
இந்த உலகத்தில் நீங்கள் மட்டுமே ஒரு அரிதான பிறவி உங்களுடைய குடும்ப மட்டுமே உலகத்தில் ஒரு அரிதான குடும்பம் உங்களைப் போன்று உங்கள் குடும்பத்தை போன்று உலகத்தில் மற்றொருவர் இல்லை ஆகையால் உங்கள் வீட்டின் சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டை, உங்களுடைய வீட்டுடன் சேர்த்து ஒப்பிட்டு பலன் அறியக் கூடாது.
Copyright @2024 Vastuengineer.in. Designed By KTG Cancellation / Refund Policy Terms & Condition Privacy Policy